வரத்து அதிகரிப்பு: உளுந்து, துவரை விலை சரிவு

பர்மா உளுந்து வரத்து அதிகரித்துள்ள நிலையில் குஜராத், மகராஷ்டிரா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் கோடை உளுந்து வரத்து அதிகரித்துள்ளதால் மூட்டைக்கு ரூ.300 வரை விலை குறைந்துள்ளது. உளுந்து மூட்டை 100 கிலோ தஞ்சை உளுந்து ரூ.4,200, பர்மா பருவட்டு ரூ.4000, பொடி ரூ. 3600, உருட்டு உளுந்தம்பருப்பு லயன் ரூ.5800, பர்மா பருவட்டு ரூ.5500, பொடி ரூ.5000, தொளி ரூ.5000 என விற்பனையானது.
ஆஸ்திரேலியா மசூர் பருப்பு காய் (100 கிலோ) ரூ.2 ஆயிரத்து 400, மசூர் பருப்பு ரூ.3 ஆயிரத்து 200 என விலை குறைந்துள்ளது. பர்மா துவரை வரத்து அதிகரித்துள்ளதால் மூட்டைக்கு ரூ.200 குறைந்துள்ளது. கடலை பருப்பு வரத்து ஆவணி மாதத்திற்கு பிறகே துவங்கும் நிலையில் விலை உயர்ந்து வந்தது. விலை உயர்வால் விற்பனை மந்தமாகி கடலை பருப்பு 8 கிலோ ரூ.4 ஆயிரத்து 575-ல் இருந்து ரூ.4 ஆயிரத்து 525 ஆக சரிந்துள்ளது. கடலை எண்ணெய் 15 கிலோ டின் ரூ. ஆயிரத்து 500-ல் இருந்து ரூ. ஆயிரத்து 475 என குறைந்துள்ளது. பாசிப்பயிறு வரத்து குறைந்துள்ளதால் மூட்டைக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications