விரைவில் கொழும்பு-தூத்துக்குடி இடையே பயணிகள் கப்பல் சேவை-இலங்கை
தூத்துக்குடி: இலங்கை அரசு சார்பில் கொழும்பு-தூத்துக்குடி இடையே பயணிகள் கப்பல் சேவை விரைவில் துவங்க உள்ளது.
தூத்துக்குடி-கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் சேவை கடந்த 13-ம் தேதி துவங்கியது. மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி. கே. வாசன் கப்பல் போக்குவரத்தை துவங்கி வைத்தார். இந்த சேவையில் ஈடுபட்டுள்ள ஸ்கார்டியா பிரின்ஸ் கப்பல் அறிவிக்கப்பட்ட பயணத்திட்டப்படி தூத்துக்குடி-கொழும்பு இடையே சென்று வருகிறது.
தற்போது குறைவான பயணிகள் சென்று வந்தாலும் ஆகஸ்ட் வரை ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர். பயணிகள் கப்பல் சேவை தொடர்பாக இந்தியா-இலங்கை இடையிலான ஒப்பந்தப்படி இலங்கை தரப்பிலும் கொழும்பு-தூத்துக்குடி இடையே மற்றொரு பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது.
இதற்கான பணியில் இலங்கை அரசு நிறுவனமான சிலோன் ஷிப்பிங் கார்ப்பரேஷன் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இலங்கை கப்பல் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அமைச்சக கொள்முதல் குழு கப்பலை தேர்வு செய்யும் பணியி்ல் ஈடுபட்டுள்ளது.
இதில் துபாயைச் சேர்ந்த ஒரு கப்பல் நிறுவனத்தின் பயணிகள் கப்பல் இந்த சேவைக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இலங்கை கப்பல் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சக உயர் அதிகாரிகள், அமைச்சக கொள்முதல் குழுவினர், சிலோன் ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவன உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கடந்த 16-ம் தேதி துபாய் சென்று பயணிகள் கப்பலை பார்வையிட்டு வந்துள்ளனர்.
அநேகமாக இந்த பயணிகள் கப்பலே கொழும்பு-தூத்துக்குடி சேவைக்கு இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. முதல் கட்டமாக வாரத்தில் 3 நாட்கள் கொழும்பு-தூத்துக்குடி இடையே பயணிகள் கப்பல் சேவை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தூத்துக்குடி-கொழும்பு இடையே ஸ்கார்டியா பிரின்ஸ் கப்பல் இயக்கப்பட்டு வரும் நிலையில் இலங்கை தரப்பில் புதிய கப்பல் இயக்கப்படும்போது தினமும் கொழும்பு-தூத்துக்குடி இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து நடைபெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications