இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை
ஜகர்த்தா: இந்தோனேசியாவில் உள்ள பாபுவா தீவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.
இந்தோனேசியாவின் பாபுவா தீவில் நேற்றிரவு 9.16 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. ஆனால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இதனால் உயிர் சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் ஆட்டம் கண்டன. வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு தெருக்களுக்கு வந்தனர்.
எனரோடலியில் இருந்து 100 மைல் தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதற்கு பிறகு பல முறை பூமி அதிர்ந்ததுள்ளது. அவை ரிக்டர் அளவுகோலில் 5.4, 5, 4.5 மற்றும் 4.3 ஆக பதிவாகியுள்ளது.
பசிபிக் கடல் பிராந்தியத்தில் பூகம்ப அபாய பகுதியில் இந்தோனேசியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications