வாஷிங்டனில் நடக்கும் அமெரிக்க- இந்திய பொருளாதார மாநாட்டில் பிரணாப் உரை
டெல்லி: மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று அமெரிக்காவில் நடக்கும் இந்திய-அமெரிக்க பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி 3 நாள் சுற்றுபயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இன்று வாஷிங்டனில் நடக்கும் இந்திய-அமெரிக்க பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு பிரணாப் உரையாற்றுகிறார். இந்தியா-அமெரிக்கா இடையேயான பொருளாதாரம் மற்றும் நிதி உடன்பாடுகள் குறித்து நடக்கும் இந்த மாநாட்டில் அமெரி்க்க கருவூல செயலர் டிமோதி எப். கெய்த்னர் உரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டில் இரு நாடுகளின் இடையேயான பொருளாதார மேம்பாடு பற்றி விவாதிக்கப்படுகிறது என்று இந்திய தொழில் கூட்டமைப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.
இரண்டு நாடுகளின் உள்கட்டமைப்பு நிதித் தேவைகள் குறித்தும், குறிப்பாக அரசு-தனியார் ஒப்பந்தங்கள், நிதித்துறையில் உள்ள தனியார் நிறுவனங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று அது மேலும் தெரிவித்துள்ளது.
இந்த ஒரு நாள் மாநாட்டில் இந்திய பொருளாதாரம், இந்திய நிதிச் சந்தைகள் மற்றும் உள்கட்டமைப்பு முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்படவிருக்கிறது.
2010-11-ம் ஆண்டில் இந்தியா-அமெரி்ககா இடையேயான வர்த்தகம் 48 பில்லியன் டாலரைத் தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரணாபுடன் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீரா சங்கர், இங்கிலாந்துக்கான இந்திய தூதர் சின்ஹா, நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் கௌசிக் பாசு, ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் சுபிர் கோகர்ன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications