23 ராமேஸ்வரம் மீனவர்களையும் விடுதலை செய்தது தலைமன்னார் கோர்ட்

இந்திய கடல் எல்லையில், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 23 தமிழக மீனவர்களையும், அவரக்ளது 5 படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர். பின்னர் அவர்களை மன்னார் சிறையில் முதலில் அடைத்த போலீஸார் பிறகு அனுராதபுரம் சிறைக்கு பின்னர் மாற்றினர்.
இவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். அரசியல் கட்சிகளும் இலங்கையின் செயலைக் கண்டித்தன.
சென்னையில் உள்ள இலங்கை அரசின் துணைத் தூதரகம், இலங்கை வங்கி, புத்த மத மடம் ஆகியவை தாக்கப்படும் என்ற அச்ச நிலை ஏற்பட்டது. இதையடுத்து 23 மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை அரசு ஒப்புக் கொண்டது.
இருப்பினும் அதில் தாமதத்தை செய்து வந்தது இலங்கை அரசு. இந்த நிலையில் தற்போது 23 மீனவர்களையும் விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்து அதுதொடர்பான கடிதத்தை தலைமன்னார் கோர்ட்டில் சமர்ப்பித்தது.
இந்த பரிந்துரையை இன்று பரிசீலித்த தலைமன்னார் கோர்ட், 23 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து 23 மீனவர்களும் அனுராதபுரம் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸார் நாளை இவர்களை கடற்படையிடம் ஒப்படைக்கவுள்ளனர்.
பின்னர் 23 இந்திய மீனவர்களையும், இந்திய கடல் எல்லையில், இந்திய கடற்படையிடம், இலங்கை கடற்படை ஒப்படைக்கும். பின்னர் அவர்கள் இந்திய கடலோரப் பாதுகாப்புப் படை மூலம் தமிழகத்திற்கு அழைத்து வரப்படுவர் என்று தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications