ஃபேஸ்புக்கை ஒரு கை பார்க்க வரும் கூகுள் ப்ளஸ்!!

இதன் விளைவு பெரிய நிறுவனங்களும் ஒரு சமூக வலைத் தளத்தை ஆரம்பிக்க வேண்டிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளன.
அந்த வகையில், தனக்கு பெரும் போட்டியாகத் திகழும் ஃபேஸ்புக்கை சமாளிக்க தானும் ஒரு சமூக வலைத்தளத்தை ஆரம்பிக்கிறது உலகின் நம்பர் ஒன் இணையதளமான கூகுள் நிறுவனம்.
இதற்கு கூகுள் ப்ளஸ் என பெயரிட்டுள்ளது.
இதுகுறித்து கூகுள் நிறுவன பொறியியல் பிரிவு மூத்த துணை தலைவர் குண்டோத்ரா தனது வலைப்பதிவில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:
சமூக இணையத்தளம் எனப்படும் சமூகவலை தளங்களில் மக்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக சமூக இணையதளத்தை உருவாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டிருந்தது. தற்போது கூகுள் பிளஸ் என்ற பெயரில் புதிய தொழில்நுட்பத்திலான சமூக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இந்த புதிய சமூக இணையத்தளம் பேஸ்புக் தளம் போன்றதுதான் என்றாலும், அதைவிட கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது. இந்த புதிய சேவையினை ஆண்ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் மொபைல் ஷாப்களிலும் பெற்றுக்கொள்ளலாம். இப்போது சோதனை ஓட்டமாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சர்க்கிள்ஸ், ஸ்பார்க்ஸ், ஹேங்அவுட்ஸ் மற்றும் மொபைல் உள்ளிட்ட சிறப்பம்சங்களை உள்ளடக்கியது இந்த புதிய தளம். வரும் நாட்களில் இந்த தளம் வாடிக்கையாளர்களின் அபிமானத்துக்குரிய தளமாக மாறும் என நம்புகிறோம்."
-இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
முதல் கட்டமாக குறிப்பிட்ட பயனாளர்களுக்கு கூகுள் ப்ளஸ் அழைப்பு அனுப்பி வருகிறது.
இன்றைய தேதிக்கு பேஸ்புக்கிற்கு 600 மில்லியன் பயனாளர்கள் உள்ளனர். இத்தனை வலுவான பேஸ்புக்கை கூகுள் ப்ளஸ் ஒரு கை பார்க்குமா... பார்க்கலாம்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications