மருத்துவ கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது-அரசுக்கு கூடுதலாக 650 சீட்கள்
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜய் இதைத் தொடங்கி வைத்தார்.
மருத்துவப் படிப்புகளுக்கான பொதுக் கலந்தாய்வு இன்று தொடங்கியது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இது. இதை சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் தரிவரிசைப் பட்டியலை வெளியிட்டார். அதில் ராசிபுரம் மாணவி சிவரஞ்சனிக்கு முதலிடம் கிடைத்தது. அவருக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.
அவர் உள்பட முதல் பத்து இடம் பிடித்த மாணவ, மாணவியருக்கான சேர்க்கை ஒதுக்கீட்டு உத்தரவை அமைச்சர் வழங்கினார்.
பின்னர் அவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியாரைச் சேர்ந்த 17 மருத்துவக் கல்லூரிகளுக்கான அரசு இடங்களுக்கு கவுன்சிலிங் தொடங்கியுள்ளது. தனியார் கல்லூரிகளில் இந்த ஆண்டு அரசுக்கு கூடுதலாக 650 இடங்கள் கிடைத்துள்ளன.
திருச்சியில் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கிடைக்கவில்லை. கிடைத்தால் 97 சீட் கூடுதலாக கிடைக்கும். அதேபோல சேலம் அன்னபூர்னா, பெரம்பலூர் தனலட்சுமி மருத்துவக் கல்லூரி மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கு 120 இடங்கள் கிடைத்துள்ளன என்றார்.
கலந்தாய்வு வருகிற 6ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம்.
இதற்கிடையே, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) ஏழு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.2.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கட்டண நிர்ணயக் குழுவின் தலைவர் நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை மாங்காட்டில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரியின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.2.25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பெரம்பலூரில் தொடங்கப்பட்டுள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி, சேலத்தில் தொடங்கப்பட்டுள்ள அன்னபூரணி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ஆண்டு கட்டணம் தலா ரூ.2.25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு நீதிபதி பாலசுப்பிரமணியன்அறிவித்த ஆண்டு கட்டண விவரம்:
பி.எஸ்.ஜி., கோவை - ரூ.2.50 லட்சம்
மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி - ரூ.2.50 லட்சம்
கற்பகவிநாயகா - ரூ.2.50 லட்சம்
ஸ்ரீ மூகாம்பிகா கன்னியாகுமரி - ரூ.2.50 லட்சம்
தாகூர், சென்னை - ரூ.2.50 லட்சம்
சென்னை மருத்துவக் கல்லூரி,திருச்சி (எஸ்ஆர்எம் குழுமம்) - ரூ.2.50 லட்சம்
ஈரோடு ஐஆர்டி பெருந்துறை - ரூ.2.50 லட்சம்
ஸ்ரீ முத்துக்குமரன் - ரூ.2.25 லட்சம்
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் - ரூ.2.25 லட்சம்
சேலம் அன்னபூரணி - ரூ.2.25 லட்சம்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications