'கேரளாவுடன் பேசாதீங்க!' - ராமதாஸ் யோசனை
சென்னை: முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கேரள அரசு விடுத்துள்ள அழைப்பை தமிழக அரசு ஏற்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் என்பதே உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அணையின் நீர்மட்டத்தை இப்போதுள்ள 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்துவதுதானே தவிர, புதிய அணை கட்டுவது தொடர்பானது இல்லை.
அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதைத் தவிர்ப்பதற்காகத்தான் புதிய அணை கட்ட வேண்டும் என்ற புதிய விவகாரத்தை கேரள அரசு கையில் எடுத்துள்ளது.உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் முல்லைப் பெரியாறு தொடர்பான வழக்கின் விசாரணை விரைவில் முடிவடைந்து தீர்ப்பளிக்கப்பட உள்ளது.
முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பது ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் தமிழகத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கப்பட வாய்ப்புள்ளது. இதைத் தெரிந்து கொண்டுதான் இந்த விவகாரத்தை மேலும் தாமதப்படுத்தும் நோக்குடன் தமிழக அரசைப் பேச்சு நடத்த வரும்படி கேரள அரசு அழைப்பு விடுத்துள்ளது.
கேரள அரசின் இந்த வஞ்சக வலையில் தமிழக அரசு ஒரு போதும் விழுந்துவிடக்கூடாது. கேரள அரசின் அழைப்பை ஏற்று பேச்சு நடத்தினால், இந்த விவகாரத்தில் தமிழகம் 125 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல நேரிடும். அதுமட்டுமின்றி தமிழகத்தின் 5 மாவட்ட உழவர்கள் தங்கள் வாழ்வாதார உரிமைகளை இழக்க நேரிடும்.
எனவே, ஆளுநர் உரையில் அறிவித்தவாறு முல்லைப் பெரியாறு சிக்கல் உச்சநீதிமன்றத்திற்கு சென்றுவிட்ட நிலையில், சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு நீதிமன்றத்தின் மூலமாக நியாயமான தீர்ப்பைப் பெறுவதற்குத்தான் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.எக்காரணத்தைக் கொண்டும் புதிய அணை பற்றி பேச்சு நடத்துவதற்கான கேரள அழைப்பை ஏற்கவே கூடாது.
- இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications