முல்லைப் பெரியாறு: மதிமுக நேரடியாகக் கிளர்ச்சியில் இறங்கும்! - வைகோ
சென்னை: முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரள அரசு தொடர்ந்து முயன்றால் மதிமுக நேரடி கிளர்ச்சியில் இறங்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
முல்லைப் பெரியாறு பிரச்னையில் உண்மைக்கு மாறான பொய்ச் செய்திகளைப் பரப்புவதையே கேரள அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
பென்னி குயிக் கட்டிய அணையைச் சேதப்படுத்த முயன்றாலோ, புதிய அணையைக் கட்ட முயன்றலோ, கேரளத்துக்குச் செல்கின்ற அனைத்துப் பாதைகளையும் மறித்து தமிழகம் பொருளாதார முற்றுகை போட நேரிடும் என்று கேரள அரசுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுவிக்க வேண்டும்.
புதிய அணையை கேரள அரசு அமைக்குமானால், பள்ளத்தில் அமையப் போகும் அந்த அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கவே முடியாமல் போய்விடும்.
உச்ச நீதிமன்றம் அமைத்த இரண்டு நிபுணர் குழுக்களும் முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது என்று திட்டவட்டமாக அறிக்கை சமர்ப்பித்துள்ளன.
இந்தியாவின் ஒருமைப்பாட்டில் உண்மையிலேயே மத்திய அரசுக்கு அக்கறை இருக்குமானால், கேரள அரசின் அக்கிரமமான போக்கைத் தடுத்தாக வேண்டும்.
கேரள அரசு தமிழகத்துக்கு விரோதமாகச் செயல்பட முனைந்தால் மதிமுக நேரடியாகக் கிளர்ச்சியில் ஈடுபடும்," என்று அவர் கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications