முதியோர் உதவித் தொகை: வீடு வீடாக விசாரணை துவக்கம்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பல்வேறு உதவித் தொகை கேட்டு பெறப்பட்ட 57 ஆயிரம் மனுக்கள் மீது நேரடி விசாரணை தொடங்கியது.
முதியோர் உதவித் தொகை ரூ.1000-க உயர்த்தப்பட்டதால் கலெக்டர் அலுவலகத்திலும், தாலுகா அலுவலகத்திலும் மனுக்கள் குவிந்தன. நெல்லை மாவட்டத்தில் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித் தொகை கேட்டு இதுவரை 56 ஆயிரத்து 561 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் உண்மை நிலை குறித்து மூன்று நாட்கள் நேரடி கள விசாரணை நடத்த அந்தந்த தாசில்தார்களுக்கு கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டார்.
இதையடுத்து தாலுகாக்களிலும் மனுக்கள் மீதான நேரடி விசாரணை தொடங்கியது. விசாரணை அலுவலர்கள் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள், ஆண் மகன் உள்ளாரா உள்ளிட்ட பல்வேறு விபரங்களை சேகரிப்பத்துடன், அவர்களிடம் கையெழுத்து பெறப்படுகிறது. விசாரணை பணியில் வி.ஏ.ஓ.க்கள், வருவாய் ஆய்வாளர்கள், பில் கலெக்டர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று (2-ம் தேதி) விசாரணையை முழுவதுமாக முடிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்த பணியை கண்காணிக்க ஒவ்வொரு தாலுக்காவிலும் துணை கலெக்டர்களும நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications