ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரும் ஹோமமாலினி!!
டெல்லி: மிருகவதை சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும், என்று, ஹேமமாலினி எம்.பி. மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல இந்தி நடிகையான ஹேமமாலினி, பாரதீய ஜனதா கட்சியின் டெல்லி ராஜ்யசபை எம்.பி.யாக உள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு அவர் நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், "தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளையொட்டிய காலத்தில் ஜல்லிக்கட்டு என்ற மாடுபிடி விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாடுகள் முட்டி கடந்த 20 ஆண்டுகளில் 200 பேருக்கும் மேல் உயிர் இழந்து இருக்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டின் போது இருவர் இறந்தனர். மேலும் 215 பேர் காயம் அடைந்தனர்.
மிருகவதை சட்டத்துக்கு எதிரானது...
இந்த விளையாட்டு, மிருகவதை சட்டத்துக்கு எதிரானது. மாடுகள் பாய்ந்து வரும் போது அதை பிடிக்கும் ஆர்வத்தில், வாலை பிடித்து இழுத்தல், கொம்பை பிடித்து அமுக்குதல் போன்றவை தவிர காளையை பல்வேறு முறைகளில் சித்ரவதைப்படுத்துகிறார்கள்.
இதனால் காளைகளுக்கு வலி மற்றும் காயங்கள் ஏற்படுகின்றன. மிருகங்களை பாதுகாக்க வேண்டும் என்பதோடு, மனித உயிர்களையும் காக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. எனவே இந்த விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்.
சட்டப்படி குற்றம்
இந்த விளையாட்டில் பங்கு பெற காளைகளை, வாகனங்களில் அடைத்து, ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு கொண்டு செல்கிறார்கள். அப்போது காளைகளுக்கு உரிய வசதிகள் கிடைப்பது இல்லை. வாகன பயணத்தின்போது காளைகள் நெருக்கமாக அடைக்கப்படுவதால், அவற்றால் நிற்க கூட முடியாத நிலை ஏற்படுகிறது. இது மிருக வதை சட்டப்படி குற்றம்," என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications