தமிழினப் படுகொலை செய்த இலங்கை ராணுவத்திற்கு இந்தியா பயிற்சி: சீமான் கண்டனம்
சென்னை: இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவின் ராணுவ பயிற்சிக் கழகங்களில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது என்று ஒப்புக்கொள்ளப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கை ராணுவப் படையினருக்கும், அதிகாரிகளுக்கும் இந்தியாவின் ராணுவ பயிற்சிக் கழகங்களில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க அதிக இடங்களை ஒதுக்கவும், தீவிரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பயிற்சி அளிக்கவும் இந்திய ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது மனிதாபிமானமற்ற, தமிழர் விரோத நடவடிக்கையாகும். இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இலங்கை ராணுவ செயலர் மேஜர் ஜெனரல் எச்.சி.பி. குணதிலக்கே தலைமையிலான குழுவுடன் இந்திய ராணுவத்தின் பன்னாட்டு ஒத்துழைப்பு பிரிவிற்கான கூடுதலை தலைமை இயக்குனர் மேஜர் ஜெனரல் ஐ.பி.சிங் தலைமையிலான குழு டெல்லியில் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் இவ்வாறு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதென இந்திய ராணுவ அதிகாரி கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய இனப் படுகொலைப் போர் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசுக்கு எதிராக உலக நாடுகள் கடும் அழுத்தம் கொடுத்துவருகின்றன.
தமிழர்களை இனப் படுகொலை செய்த இலங்கை அரசை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க உலக நாடுகளுடன் இணைந்து இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதற்கு நேர் மாறாக, தமிழினப் படுகொலை செய்த இலங்கை ராணுவத்திற்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியளிக்கப்படும் என்று இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய இனப் படுகொலையை ஆதரிக்கிறது என்பது மட்டுமின்றி தமிழர்களின் குரலாக எதிரொலித்த தமிழக சட்டசபையின் தீர்மானத்தையும் அவமதிப்பது ஆகும்.
இந்திய ராணுவத்தின் இம்முடிவு, அது தமிழினப் படுகொலையில் இலங்கை ராணுவத்திற்கு முழுமையாக உதவியுள்ளது என்பதற்கு மேலும் ஒரு அத்தாட்சியாகும்.
இலங்கை ராணுவத்தின், அந்நாட்டு அரசின் மனிதாபிமான முகம்தான் இன்றைக்கு உலகெங்கிலும் கண்டனத்திற்குரியதாக உள்ளது. ஐ.நா. அமைதிப் படையின் அங்கமாக ஹைட்டி நாட்டிற்குச் சென்ற இலங்கை ராணுவத்தினர், அந்நாட்டின் சிறுமிகளை பாலியல் வன்முறை செய்துள்ளனர் என்று குற்றம்சாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஆனால் இந்தியாவின் ராணுவமோ அந்நாட்டிற்கு மனிதாபிமான நடவடிக்கைகள் பற்றிக் கற்றுத் தரப்போகிறேன் என்கிறது. இதைவிடக் கேலிக் கூத்தும், கொடூரமும் வேறு என்ன இருக்க முடியும்?
பன்னாட்டு மனிதாபிமானப் பிரகடனங்களில் கையெழுத்திட்டுள்ள நாடான இந்தியாவின் ராணுவம், அந்தப் பிரகடனங்களின்படி குற்றமிழைத்துள்ளதாக ஐ.நா. நிபுணர் குழுவால் குற்றம்சாட்டப்பட்டுள்ள நாட்டிற்கு ராணுவ பயிற்சி அளிக்க முன்வந்திருப்பது, மனிதாபிமான பிரகடனங்களை அவமதிப்பது ஆகும்.
இந்திய இராணுவத்தின் இந்த நடவடிக்கை இலங்கைத் தொடர்பான இந்திய அரசின் தவறான போக்கு தடையற்று தொடருவதையே காட்டுகிறது. இதனை தமிழர்களும், தமிழக அரசும் புரிந்துகொள்ள வேண்டும். ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்திய அரசின் போக்கு நியாயமற்றதாகவே எதிர்காலத்திலும் இருக்கும் என்பதற்கு இந்திய ராணுவத்தின் இந்த முடிவு ஒரு அறிகுறியாகும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications