குளிர்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா நிறைவேற்றம்: பிரதமர்
டெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதில் அரசு தீவிரமாக உள்ளது.
லோக்பால் மசோதா குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நேற்று பிரதமர் மன்மோகன் சிங் கூட்டியிருந்தார்.
அந்த கூட்டத்தி்ல பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது,
ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை தான் என்றாலும் அவை எளிமையாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். பிரதமர் உள்ளிட்ட உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரித்து தண்டிக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதல்ல என்ற கருத்து நிலவி வருகிறது.
உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரி்க்க லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதிலும், இதன் மூலம் ஊழல் புகார்களை விரைந்து விசாரித்து கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதிலும் அரசு உறுதியாக உள்ளது. இந்த மசோதைவை குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற அரசு தீவிரமாக உள்ளது.
பொதுமக்கள் பிரதிநிதிகளின் சில கோரி்க்கைகள் இணையான அரசுக்கு வழிவகுத்துவிடுமோ என்ற அச்சம் உள்ளது. அரசமைப்பு சட்டத்துக்குட்பட்டுத்தான் லோக்பால் அமைப்பின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
லோக்பால் மசோதா பிற சட்டங்களிலிருந்தும், ஜனநாயகத்தின் அடிப்படை விதிகளிலிருந்தும் திசை மாறிவிடக்கூடாது. அரசமைப்புச் சட்டத்தில் ஏற்கனவே உள்ள சட்டவிதிகளை லோக்பால் மசோதாவில் முறையாக இடம் பெறச் செய்ய வேண்டும்.
தற்போது ஊழல் பிரச்சனை தான் பெரும் பிரச்சனையாக உள்ளது என்பதை அரசு மறுக்கவில்லை.
ஏற்கனவே ஊழலுக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டம், அந்நிய செலாவணி மோசடி தடைச் சட்டம், மத்திய கண்காணிப்பு ஆணையச் சட்டம், தகவல் அறியும் சட்டம் போன்றவை உள்ளன. அவற்றில் கடுமையான தண்டனை அளிக்கும் விதிகளும் உள்ளன.
லோக்பால் வரைவு மசோதாவை தயாரிப்பதில் ஒரு சில விஷயங்களைத் தவிர மற்றவற்றில் கருத்து ஒற்றுமை உள்ளது. முக்கியத்துவம் வாயந்த லோக்பால் சட்டத்தில் உள்ள கருத்து வேறுபாடுகளைக் களையத் தான் இந்த கூட்டத்தை கூட்டினேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications