13 வயது சிறுவனை ராணுவம் சுட்டுக் கொன்றது இதயங்களை உலுக்கும் படுகொலை-ராமதாஸ்
சென்னை: 13 வயது சிறுவனை ராணுவ வீரர் ஒருவர் கொடூரமாக சுட்டுக் கொன்ற சம்பவம் இதயங்களை உலுக்கி விட்ட படுகொலை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தீவுத்திடல் அருகே உள்ள ராணுவக் குடியிருப்புக்குள் நுழைந்து அங்குள்ள மரத்தில் ஏறி பழம் பறிக்க முயன்ற சிறுவன் தில்ஷனை ராணுவ வீரர் ஒருவர் இரக்கமே இல்லாமல் சுட்டுக் கொன்றது அனைவரின் இதயங்களையும் உலுக்கியுள்ளது. தில்ஷனின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விடுமுறை நாளில் விளையாடச் சென்ற சிறுவனுக்கு இந்த கொடூரம் நடந்துள்ளது.
அவன் ஒன்றும் தீவிரவாதியில்லை. சொல்லப்போனால் ராணுவக் குடியிருப்புக்குள் நுழைவது தவறு என்று கூட அவனுக்கு தெரிந்திருக்காது. ஒரு சிறுவனை ராணுவ வீரர் சுட்டுக் கொன்றுள்ளது கண்டிக்கத்தக்கது. மனிதநேயம் உள்ள யாரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுவனைக் காப்பாற்றாமல் அவன் மீது இலை, தழைகளைப் போட்டு மூடியுள்ளனர். பாதுகாப்பு அதிகம் உள்ள ராணுவக் குடியிருப்புக்குள் ராணுவத்தினரைத் தவிர வேறு யாரும் இதை செய்திருக்க முடியாது.
சிறுவனைக் கொன்ற ராணுவ வீரரை தமிழக காவல்துறை கைது செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி கடுமையான பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து அவருக்கு அதிக பட்சமாக தூக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications