வீடு அபகரிப்பு, கொலை மிரட்டல்: திமுக நிர்வாகி அறிவுடைநம்பி கைது
திருச்சி: திருச்சியில் வீடு அபகரிப்பு புகாரில் திமுக நிர்வாகி அறிவுடைநம்பியை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கமலா (45). உறையூர் நாச்சியார்பாளையத்தில் உள்ள தனக்கு சொந்தமான ஒரு வீட்டை அப்பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகியும், கோட்ட தலைவருமான அறிவுடைநம்பி என்பவருக்கு வாடகைக்கு கொடுத்திருந்தார்.
ஆனால் அறிவுடை நம்பி பல மாதமாக வீ்ட்டு உரிமையாளர் கமலாவுக்கு வாடகை கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். கமலா பலமுறை நேரில் சென்று வாடகை பாக்கியை கேட்ட போதும் வாடகை மட்டும் கிடைத்தபாடு இல்லை.
இது குறித்து கடந்த திமுக ஆட்சியின் போது உறையூர் காவல் நிலையத்தில் கமலா புகார் கொடுத்துள்ளார். ஆனால் தவறு செய்த கோட்ட தலைவர் அறிவுடைநம்பி மீது வழக்கு பதிவு செய்யாமல் கமலாவை போலீசார் மிரட்டி அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகின்றது.
இதனால் தனது வீட்டை காலி செய்யுமாறு அறிவுடை நம்பியிடம் கமலா கூறியுள்ளார். இனால் ஆவேசம் அடைந்த அறிவுடை நம்பி கமலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து கமலா திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்துவிடம் புகார் மனு கொடுத்தார்.
இப்புகாரின் பேரில் திமுக நிர்வாகியும், கோட்ட தலைவருமான அறிவுடைநம்பியை உறையூர் போலிசார் கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications