தமிழக சட்டசபை நியமன எம்எல்ஏவாக நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் நியமனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆங்கிலோ-இந்திய பிரிவினருக்கு பிரநிதித்துவம் அளிக்கும் வகையில், தமிழக சட்டசபையின் நியமன எம்.எல்.ஏவாக டாக்டர் நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டசபையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 234. கூடுதலாக ஒரு உறுப்பினர் கவர்னரால் நியமிக்கப்படுவார் (நியமன எம்எல்ஏ).

தமிழகத்தில் உள்ள ஆங்கிலோ-இந்தியர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அந்தப் பிரிவைச் சேர்ந்த ஒருவரை அரசின் பரிந்துரைப்படி கவர்னர் நியமிப்பார்.

கடந்த திமுக ஆட்சியில் ஆஸ்கர் நெகிலி நியமன எம்எல்ஏவாக இருநதார்.

இந் நிலையில் அதிமுக ஆட்சியில் நியமன எம்எல்ஏவாக நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+