கன்னியாகுமரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் திடீர் ஸ்டிரைக்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் நேற்று திடீர் என்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டார், தோட்டியோடு, பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல், குலசேகரம், மார்தாண்டம் ஆகிய ஒன்பது இடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை உள்ளது.
இதில் 45 பேர் டிரைவர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இதில் பாபுநேசகுமார் என்பவர் சமீபத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சக டிரைவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இது குறித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
மண்டல மேலாளர் எங்களுக்கு மிகவும் தொல்லை கொடுத்து வருகிறார். மாதம் குறைந்தது 100 பேரையாவது மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார். எங்களை வெறும் பில்லில் கையெழுத்துப் போடுமாறு கட்டாயப்படுத்துகிறார். இதையெல்லாம் நாங்கள் யாரிடமாவது கூறினால் உடனே இடமாற்றம் தான் என மிரட்டுகிறார். எனவே, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இது பற்றி விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் ஆஷிஸ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இருப்பினும் அவர்கள் நேற்று மாலை 4 மணி வரை வேலை நிறுத்தத்தை தொடர்ந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications