அமெரிக்க அதிபர் ஒபாமா சுட்டுக் கொல்லப்பட்டதாக ட்விட்டர் மூலம் வதந்தி
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சுடப்பட்டு விட்டதாக ட்விட்டர் மூலம் பரவிய வதந்தியால் அமெரிக்க அரசும், மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இப்போதெல்லாம் உலகம் முன்பு போல இல்லை. லேசாக யாராவது தும்மினால் கூட அதை ட்விட்டர் மூலம் போட்டுத் தாக்கி விடலாம். அந்த அளவுக்கு படு வேகமாகி விட்டது உலகம். உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் அடுத்த விநாடியே அது இணையத்திற்கு வந்து விடுகிறது.
இதனால் பல நல்லது நடந்தாலும், சில நேரங்களில் தவறாகவும் சிலர் பயன்படுத்தி விடுகிறார்கள். அந்த வகையில், அமெரிக்க அதிபர் ஒபாமா சுடப்பட்டு விட்டதாக ட்விட்டர் மூலம் வதந்தியைப் பரப்பி உலகை பதற வைத்துள்ளனர் சிலர்.
அமெரிக்காவின் பாக்ஸ் நியூஸ் சேனலின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்த சில விஷமிகள், அதில் புகுந்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்தியை சொருகி விட்டனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. இந்த விஷமத்தைச் செய்தவர்கள் தங்களது பெயரை ஸ்கிரிப்ட் கிட்டிஸ் என்று வைத்துள்ளனர்.
இந்த வதந்தித் தகவலால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உலகம் முழுவதும் இந்த வதந்தி பரவி மேலும் பரபரப்பைக் கூட்டி விட்டது.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அமெரிக்க அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் பாக்ஸ் நியூஸ் நிறுவனமும் தங்களது ட்விட்டர் கணக்கு எப்படி ஹேக் செய்யப்பட்டது என்பது குறித்து ட்விட்டர் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications