பத்பநாபசுவாமி கோவிலில் கிடைத்துள்ள ரூ. 1 லட்சம் கோடியை வைத்து என்ன செய்யலாம்?

திருவனந்தபுரம் பத்பநாபசுவாமி கோவிலில் உள்ள 6 பாதாள அறைகளில் இருந்து இதுவரை ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான தங்க, வைர, வைடூரிய நகைகள், சிலைகள், காசுகள் என பல விலைமதிப்பற்றவை எடுக்கப்பட்டுள்ளன. இத்தனை நாட்கள் திருப்பதி ஏழுமலையான் கோவில் தான் பணக்கார கோவில் என்று அனைவரும் நினைத்திருந்தனர்.
ஆனால் திருப்பதி கோவிலை பின்னுக்குத் தள்ளிவிட்டு பத்பநாபசுவாமி கோவில் பணக்கார கோவிலாகிவிட்டது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகிலேயே பணக்கார சாமியாகவும் பத்மநாபசுவாமி உருவெடுத்துள்ளார்.
பத்பநாபசுவாமி கோவில் நகைகள் மதிப்பு விப்ரோ நிறுவனத்தி்ன் சந்தை முதலீடான ரூ. 1.04 லட்சம் கோடிக்கு இணையானது. இது ரிலையன்ஸ் நிறுவனத்தின் மதிப்பில் மூன்றில் பங்கு உள்ளது.
பாஸ்கோ நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யப்போவதாக கூறியுள்ள 2 பில்லியன் டாலரை விட இரண்டு மடங்கு அதிகமாகும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த நாளிதழ் மேலும் கூறியுள்ளதாவது,
தற்போது கிடைத்துள்ள தங்கத்தை வைத்து என்ன செய்யலாம் என்பதையும் அது ஒரு கணக்கு போட்டுள்ளது:
1. உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு ஆகும் ரூ. 70 ஆயிரம் கோடி செலவிடலாம். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்திற்கு ரூ. 40 ஆயிரம் கோடி கொடுக்கலாம்.
2. 2. 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசின் கல்வி பட்ஜெட்டை கவனிக்கலாம்.
3. 7 மாதத்திற்கான பாதுகாப்பு செலவைச் சமாளிக்கலாம், அரசின் வட்டிக் கடனை 4 மாதத்திற்கு செலுத்தலாம்.
இதேபோல இது குறித்து மெயில் டுடே கூறியதாவது,
ரூ. 1 லட்சம் கோடியை வைத்து:
1. 290 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் கட்டலாம்.
2. 14 ஆயிரம் கிமீ தேசிய நெடுஞ்சாலை அமைக்கலாம்.
3. யூரோ பைட்டர் போன்று 255 போர் விமானங்கள் வாங்கலாம்.
4. ஜவஹர்லால் நேரு மைதானம் போல் ஆயிரம் விளையாட்டு மைதானங்கள் கட்டலாம்.
இந்த தங்கக் குவியல் கோவிலுக்கா, கோவில் நிர்வாகத்திற்கா, மாநில அரசுக்கா அல்லது மத்திய அரசுக்கா என்று உச்ச நீதிமன்றம் தான் தெரிவிக்க வேண்டும். இவ்வளவு தங்கத்தை வைத்து என்ன செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications