2ஜி: ராசா வங்கிக் கணக்கு விவரங்கள்- சிபிஐ இன்று தாக்கல்?
டெல்லி: 2ஜி ஊழல் வழக்கில் இன்று தாக்கல் செய்யப்படும் இடைக்கால அறிக்கையில் ஆ.ராசாவின் வெளிநாட்டு வங்கிக் கணக்கு விவரங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது.
2ஜி ஊழல் வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ ஏற்கனவே 2 அறிக்கைகள் தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் இன்று இடைக்கால அறி்க்கை தாக்கல் செய்கிறது. அதில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவின் வெளிநாட்டு வங்கிக் கணக்கு விவரங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது.
இது தவிர எஸ்ஸார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மீது சுமத்தபட்டுள்ள புதிய குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்ய சிபிஐ கூடுதல் கால அவகாசம் கேட்கும் என்றும் தெரிகிறது.
2ஜி வழக்கில் கைதாகி திஹார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, அவரது உதவியாளர் ஆர்.கே.சந்தோலியா மற்றும் முன்னாள் தொலைத்தொடர்புச் செயலர் சித்தார்த் பெகுரா ஆகியோரின் வெளிநாட்டு வங்கிக் கணக்கு விவரங்களை சிபிஐ இன்று சிறப்பு நீதிமன்றத்தில் சமர்பிக்கும் என்று டெல்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்நிலையில் அடுத்த குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய சிபிஐ கூடுதல் கால அவகாசம் கேட்கும் என்று கூறப்படுகி்ன்றது.
இந்த குற்றப்பத்திரிகையில் எஸ்ஸார் குழுமத்துக்கும், லூப் டெலிகாம் நிறுவனத்துக்கும் இடையேயான தொடர்பு குறித்த விவரங்களும் இடம்பெறலாம் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications