சாத்தான்குளம் காமராஜர் சிலையில் ஏணி மாயம்: கண்டுபிடிக்க பிட் நோட்டீஸ்
சாத்தான்குளம்: சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜர் சிலையின் கீழ் வைக்கப்பட்ட புத்தம் புதிய ஏணி திருடு போயுள்ளது. இதை கண்டுபிடிக்க பிட் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது.
சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் காமராஜர் சிலை உள்ளது. அவரது பிறந்த நாள் மற்றும் முக்கிய நிகழ்ச்சியின் போது சிலைக்கு மாலை போட வருபவர்கள் ஏணியை வாடகைக்கு எடுத்து வருவார்கள். அங்கு நிரந்தரமாக ஏணி கிடையாது.
இதையடுத்து சாத்தான்குளம் லயன்ஸ் கிளப் தலைவர் தங்கராஜ், வர்த்தக சங்க தலைவர் சுந்தரானந்தபூபதி ஆகியோர் சார்பில் ரூ.10 ஆயிரம் மதிப்பில் புதிய ஏணி வாங்கப்பட்டு சிலை முன் நேற்று முன்தினம்(4-ம் தேதி) வைக்கப்பட்டது. இந்நிலையில் அன்றிரவே அந்த ஏணி மாயமாகி விட்டது.
இது பற்றி அறிந்த சங்க நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். திருடியவர்களை பிடிப்பதற்காக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்காமல் பிட் நோட்டீஸ் அடித்து திருடியவர்களை பிடிக்க முடிவு செய்தனர்.
இதை தொடர்ந்து உடனடியாக ஆயிரக்கணக்கான பிட் நோட்டீஸ்கள் அடிக்கப்பட்டது. அவற்றை நேற்று சாத்தான்குளத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் விநியோகித்தனர். மேலும் பொதுமக்களிடமும் கொடுக்கப்பட்டது. அந்த நோட்டீசில் சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பு வைத்திருந்த இரும்பு ஏணியை யாரோ எடுத்து சென்று விட்டனர். ஏணியை எடுத்து சென்ற கும்பல், எடுத்து செல்ல பயன்படுத்திய வண்டி டிரைவர், அதை விலைக்கு வாங்கிய நபர் போனறவைகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
திருட்டு போன ஏணியை கண்டுபிடிக்க பிட் நோட்டீஸ் அடித்து வினியோகித்திருக்கும் சம்பவம் சாத்தான்குளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications