வெடி வைத்து மீன் பிடித்த போது விபரீதம்- 3 மீனவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வெடி வைத்து மீன் பிடிக்க முயன்றபோது வெடி தவறுதலாக வெடித்து 3 மீனவர்கள் உயிரிழந்தனர்.3 பேர் உயிருடன் தப்பினர்.
ராமநாதபுரம் மாவட்ம் புதுக்குடியைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். அப்போது வெடி வைத்து மீன் பிடிக்க முயற்சித்துள்ளனர். அந்த சமயத்தில் வெடி தவறுதலாக வெடிக்கவே அதில் சிக்கி 3 மீனவர்கள் படகிலேயே உயிரிழந்தனர். மற்ற 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த சம்பவத்தால் புதுக்குடி கிராமத்தில் சோகம் நிலவுகிறது. வெடி வைத்தோ அல்லது தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டோ மீன் பிடிக்கக் கூடாது என்று ஏற்கனவே மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.ஆனால் அதையும் மீறி சில மீனவர்கள் இதுபோல செய்கின்றனர்.












Click it and Unblock the Notifications