பிஇ பொது கலந்தாய்வு துவங்கியது: மாணவர் அசோக் குமார் முதலிடம்
சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு இன்று காலை துவங்கியது. இதில் மாணவர் அசோக் குமார் முதலிடம் பெற்றார். இவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடியில், ஏரோநாட்டிக்கல் என்ஜீனியரிங் பிரிவில் சேர்ந்தார்.
தமிழகத்தில் உள்ள 484 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 25 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 28-ம் தேதி முதல் நடந்து வருகிறது.
நேற்று மாற்று திறனாளிகள் மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு நடந்தது. கண்பார்வை குறைபாடு உடையவர்கள், ஊனமுற்றவர்கள், காது கேட்காதவர்கள் என 3 பிரிவுகளில் தலா 1000 ஆயிரம் இடம் வீதம் 3 ஆயிரம் இடங்கள் உள்ளன.
3 ஆயிரம் இடங்கள் இருக்கின்றபோதிலும் காது கேளாதவர்கள் 43 பேர், பார்வை குறைந்தவர்கள் 47 பேர், ஊனமுற்றவர்கள் 280 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அவர்களுக்கான இட ஒதுக்கீட்டு கடிதங்களை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் வழங்கினார்.
இன்று முதல் அனைத்து பிரிவினருக்கான பொது கலந்தாய்வு துவங்கியது. இந்த கலந்தாய்வு இன்று முதல் 35 நாட்களுக்கு நடக்கவிருக்கிறது. இதில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 622 மாணவ-மாணவியர்கள் கலந்து கொள்கின்றனர்.
இன்று 200 மற்றும் 199 கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவியர்கள் கலந்து கொள்கின்றனர். இன்றைய கலந்தாய்வில் மாணவர் அசோக் குமார் முதலிடம் பெற்றார். இவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடியில், ஏரோநாட்டிக்கல் என்ஜீனியரிங் பிரிவில் சேர்ந்தார்.
தர வரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தவர்களுக்கான ஒதுக்கீட்டு கடிதத்தை அமைச்சர் பழனிச்சாமி வழங்குகிறார்.
பாலிடெக்னிக் சேர்க்கை ஆணை: அமைச்சர் பழனிச்சாமி வழங்கினார்
முன்னதாக, சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று நடந்ததது. இதை உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பார்வையிட்டார்.
அங்கு வந்திருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கலந்துரையாடினார். பின்னர் மாணவர் சேர்க்கைக்கான ஆணையை மாணவர்களிடம் வழங்கினார்.
அந்த கல்லூரியில் உள்ள பரிசோதனை கூடங்களை ஆய்வு செய்து, உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தார். ஆய்வின் போது தொழில் நுட்பக்கல்வி இயக்கக ஆணையர் ரமேஷ் சந்த் மீனா, சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சுந்தர மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications