எம்.பிக்களுக்கான தொகுதி வளர்ச்சி நிதி ரூ. 2 கோடியிலிருந்து ரூ. 5 கோடியாக உயர்வு
டெல்லி: நாடாளு்மன்ற உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுதி வளர்ச்சி நிதி ஆண்டுக்கு ரூ. 2 கோடி என்பதிலிருந்து ரூ. 5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அப்போது இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
இந்த ரூ.5 கோடி நிதியில் 2 சதவீத தொகை, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டு இந்தத் திட்டம் முறையாக செயல்படுவது உறுதி செய்யப்படும். 2011-12ம் நிதியாண்டிலிருந்து தொகை உயர்வு அமலுக்கு வருகிறது. இந்த அதிகரிப்பு மூலம் மத்திய அறசுக்கு ஆண்டுக்கு ரூ. 3950 கோடி கூடுதல் செலவாகும்.
இதுகுறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறுகையில், எம்.பிக்களின் தொகுதி வளர்ச்சி நிதியை அதிகரித்துள்ளதன் மூலம் ஒவ்வொரு தொகுதியும் பல்வேறு பலன்களைப் பெற்று ஏற்றம் அடைய முடியும். தொகுதி மக்களின் பல்வேறு குறைகளை இதன் மூலம் தீர்த்து வைக்க முடியும். தொகுதியை சிறந்த முறையில் முன்னேற்றமடையச் செய்ய இது உதவும் என்றார்.
கடந்த 1993-94ம் ஆண்டு முதல் எம்.பி தொகுதி வளர்ச்சி நிதித் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திட்டம் தொடங்கிய காலத்திலிருந்து 2011 மார்ச் 31ம் தேதி வரை எம்.பிக்கள் 13.87 லட்சம் பணிகளை தொகுதி வளர்ச்சி நிதி மூலம் பரிந்துரைத்துள்ளனர். இதில் மாவட்ட நிர்வாகத்தால் 12.30 லட்சம் பணிகள் அங்கீகரிக்கப்பட்டு, அதில், 11.24 லட்சம் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
அதேபோல திட்டம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து 2011 மார்ச் 31ம் தேதி வரை மொத்தம் ரூ. 22,490.57 கோடி அளவுக்கு வளர்ச்சி நிதி விடுவிக்கப்பட்டு, அதில், ரூ. 20,454.56 கோடி செலவிடப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications