பரிகாரம் செய்வதாகக் கூறி 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் செக்ஸ்- போலி சோதிடர் தகவல்
நெல்லை: பரிகாரம் பார்ப்பதாக கூறி இதுவரை 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் செக்ஸ் உறவு வைத்துள்ளதாக நெல்லையில் கைதான சோதிடர் பற்றி பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை வண்ணார்பேட்டையைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் கேரள மாநிலம் கோவளத்திலுள்ள ஒரு லாட்ஜில் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த லாட்ஜுக்கு எர்ணாகுளம் மாவட்டம் சோட்டாணிக்கரையைச் சேர்ந்த சோதிடர் நந்தகுமார் அடிக்கடி வந்து தங்கி செல்வது வழக்கம். இதனால் அவருடன் கிருஷ்ணனுக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த வாரம் அஙகு வந்த நந்தகுமாரிடம் கிருஷ்ணன் தங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை ஜாதகம் பார்த்து தீர்த்து வைக்குமாறு கூறினார்.
இதற்கு நந்தகுமார் ஒப்புக் கொண்டார். நேற்று நந்தகுமார் நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். இது குறித்த தகவலை கிருஷ்ணனுக்கு தெரிவித்தார். இதையடுத்து கிருஷ்ணனின் மனைவி லலிதா மற்றும் உறவினரான காளக்காட்டைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி பானுமதி ஆகியோர் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஜாதகங்களை எடுத்துக் கொண்டு நந்தகுமார் தங்கியிருந்த அறைக்கு சென்றனர்.
அங்கு குடிபோதையில் இருந்த நந்தகுமார் ஜாதகம் பார்ப்பது போல் நடித்து விட்டு திடீரென இருவர் மீதும் பாய்ந்து சேலையை பிடித்து இழுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து லாட்ஜ் ஊழியர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சந்திப்பு இன்ஸ்பெக்டர் முத்துகுமார், எஸ்ஐ ரேனியல் ஜேசுபாதம் மற்றும் போலீசார் நந்தகுமாரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போலி சோதிடர் என்பதும், மதுரை, சென்னை, கோவை, திருச்சி உள்பட பல பகுதிகளில் சோதிடம் பார்ப்பது போல நடித்து பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதுவரை 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் இவர் உறவு கொண்டுள்ளது விசாரணையி்ல் தெரிய வந்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications