கருணாநிதியுன் கூட்டணி சிக்கல், அமைச்சர்கள் நியமனம் குறித்து பிரணாப் பேச்சு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் அடுத்தடுத்து திமுக தலைவர்கள் கைதாகி வரும் நிலையில், திமுக கடும் அதிருப்தியிலும், விரக்தியிலும் மூழ்கியுள்ள நிலையில் அதை சமாதானப்படுத்தும் வகையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று சென்னை வந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
இன்று காலை சென்னை வந்த பிரணாப் முகர்ஜி, கோபாலபுரம் வீட்டிற்கு சற்று முன்னர் வருகை தந்தார். பின்னர் அவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது 2ஜி விவகாரத்தில் பதவி விலகிய தயாநிதி மாறனும் உடன் இருந்தார். டி.ஆர்.பாலு, பொன்முடி, காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
தயாநிதி மாறன் விலகிய பின்னர் கருணாநிதியை, பிரணாப் முகர்ஜி சந்திப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பின்போது 2ஜி விவகாரத்தில் காங்கிரஸின் நிலை, சிபிஐ விசாரணையில் அது தலையிட முடியாத சூழலில் இருப்பது போன்றவை குறித்து பிரணாப் முகர்ஜி விளக்கியதாகத் தெரிகிறது.
2 அமைசசர்களை திமுக கொடுக்குமா?
மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரியின் இலாகா குறித்தும் பிரணாபுடன், கருணாநிதி பேசியதாகத் தெரிகிறது. இந்தத் துறையை அழகிரி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. எனவே இலாகா மாற்றம் குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
2ஜி விவகாரம் பெரிதாக வெடித்த பின்னர், குறிப்பாக கனிமொழி கைது, தயாநிதி மாறன் ராஜினாமா ஆகிய சம்பவங்களுக்குப் பிறகு முக்கிய காங்கிரஸ் மேலிடத் தலைவர் ஒருவர் கருணாநிதியை தேடி வந்து சந்திப்பது இதுவே முதல் முறையாகும் என்பது நினைவிருக்கலாம்.
காங்கிரஸ் கட்சி திடீரென இறங்கி வருவதற்கு முக்கியக் காரணம் இருப்பதாக கூறப்படுகிறது. கோவையில், திமுக தனது செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டங்களைக் கூட்டியுள்ளது. அப்போது காங்கிரஸுடனான கூட்டணி குறித்து அது முடிவெடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக உறவை முறித்துக் கொள்ளும் முடிவுக்கு அது போகக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால்தான் பிரணாப் முகர்ஜியை, சோனியா காந்தி சென்னைக்கு அனுப்பி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications