தூத்துக்குடியில் பள்ளி மாணவி பலாத்காரம்- எய்ட்ஸ் நோயாளி கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். மாணவி மீட்கப்பட்டு பரிசோதனைக்கு பின்னர் காப்பகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த சிறுமி வேம்பாரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் 26-ம் தேதி மாமா மாரிமுத்துவுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வரும் தனது அம்மாவை பார்க்கச் சென்றார்.
பின்னர் அவர் மருத்துமனையில் திடீரென மாயமானார். எங்கு தேடியும் மாணவியைக் காணாததால் மாரிமுத்து தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுடலைமணி என்பவர் மாணவியை மருத்துவமனையில் இருந்து கடத்திச் சென்றது தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று இரவு தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் நின்றிருந்த மாணவியை போலீசார் மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
மாணவியை விட்டு விட்டு தப்பியோட முயன்ற சுடலைமணியை போலீசார் கைது செய்து தூத்துக்குடி ஜேஎம் எண் 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
விசாரணையில் கைதான ஆட்டோ டிரைவர் சுடலைமணியின் முதல் மனைவி முனிஸ்வரி எய்ட்ஸ் நோயால் இறந்து போனதும், 2-வது மனைவி காமாட்சியுடன் அவர் குடும்பம் நடத்தி வந்ததும் தெரிய வந்தது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சுடலைமணிக்கு 9 குழந்தைகள் உள்ளனர்.


Click it and Unblock the Notifications
