அதிமுக செயற்குழு 20ம் தேதி சென்னையில் கூடுகிறது
சென்னை: முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக செயற்குழுக் கூட்டம் வருகிற 20ம் தேதி சென்னையில் உள்ள கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக செயற்குழு கூட்டம் வருகின்ற 20.7.2011 புதன்கிழமை அன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.
அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து அதிமுக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
முதல்வரை சந்தித்த வாஷிங்டன் போஸ்ட் நிர்வாகி:
இந் நிலையில் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையின் சர்வதேச விளம்பரப் பிரிவு மேனேஜர் டயானா பக்லண்ட் இன்று சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார்.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல பத்திரிக்கை வாஷிங்டன் போஸ்ட். அதன் சர்வதேச விளம்பரப் பிரிவு மேனேஜர் டயானா பக்லண்ட் இன்று காலை தலைமைச் செயலகத்திற்கு வந்தார்.
அவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications