மாஜி திமுக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு, தம்பி, அண்ணன் மகன் திமுக பதவிகளை உதறினர்
சென்னை: வடசென்னை மாவட்ட திமுக செயலாளர் வி.எஸ். பாபு கட்சிப் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். இது தவிர வி.எஸ். பாபுவின் தம்பி, அவரது அண்ணன் மகன் ஆகியோரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
வடசென்னை மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் வி. எஸ். பாபு. புரசைவாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏவாகவும் வலம் வந்தவர். வட சென்னை திமுகவில் முக்கிய பிரமுகராகவும் திகழ்ந்தவர். கடந்த திமுக ஆட்சிக்காலத்தின்போது நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலின்போது வாக்குச் சாவடிகளில் நடந்த கலவரங்களில் முக்கியப் பங்காற்றியவர் இவர்.
அவருக்கு அன்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சீட் கொடுக்கப்படவில்லை.
இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல், அவர் கொளத்தூர் பகுதியில் போட்டியிட்ட மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக தேர்தல் வேலை செய்தார். இருப்பினும் ஸ்டாலின் மிகக் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்ததால் வி. எஸ். பாபு மீது திமுக நிர்வாகிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.
மேலும், சட்டசபைத் தேர்தலையொட்டி வட சென்னை அதிமுக செயலாளராக இருந்த பி.கே.சேகர் பாபு திமுகவுக்குத் தாவினார். இதை வி.எஸ்.பாபு விரும்பவில்லை. அப்போது அது குறித்து செய்திகள் வெளியாகின. ஆனால் சேகர் பாபு வருகையால் தான் கவலைப்படவில்லை என்று பாபு சமாளித்திருந்தார்.
இந்த நிலையில், வி.எஸ்.பாபு கட்சிப் பொறுப்பிலிருந்து விலகி விட்டார். வடசென்னை மாவட்ட திமுக செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக கட்சி மேலிடத்திற்கு கடிதம் அனுப்பினார். அவரை சமாதானப்படுத்த முயன்ற கட்சியின் மூத்த தலைவர்கள் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து தற்போது ஆர்.டி.சேகர் வடசென்னை தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது ஒரு புறம் இருக்க மறுபுறம் மாநகராட்சி மண்டல தலைவரும் வி.எஸ். பாபுவின் தம்பியுமான வி.எஸ். ரவி மற்றும் கொளத்தூர் பகுதி இளைஞர் அணி அமைப்பாளரும் பாபுவின் அண்ணன் மகனுமான வி.எஸ்.ஜே.சீனிவாசன் ஆகியோரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
ஒரே நேரத்தில் வி. எஸ். பாபு, அவரது தம்பி, அண்ணன் மகன் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள், அப்படியே இருப்பார்களா அல்லது அதிமுகவுக்குப் போவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி










Click it and Unblock the Notifications