இலவச லேப்டாப்: டெண்டர் திறப்பு 18ம் தேதிக்கு தள்ளிவைப்பு
சென்னை: இலவச லேப்டாப் தொடர்பான டெண்டர் தேதி 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்குவதற்கு 9 லட்சத்து 12 ஆயிரம் லேப்டாப் தயாரித்து தர உலகளாவிய டெண்டர் கோரப்பட்டிருந்தது.
தலா ரூ. 15,000 செலவு பிடிக்கும் லேப்டாப்களை 9.12 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு வழங்க ரூ. 1,368 கோடி செலவாகும்.
இதை தயாரித்து வழங்க பல்வேறு நிறுவனங்கள் முன் வந்துள்ளன. இவர்கள் சமர்பித்த டெண்டர்கள் இன்று மாலை 3 மணிக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மேலும் பல நிறுவனங்கள் பலவிதமான மாடல் லேப்டாப்களை தயாரித்து வழங்க முன்வந்துள்ளன.
இதையடுத்து டெண்டரில் மேலும் நிறுவனங்கள் பங்கேங்கும் வகையில் டெண்டர் தேதி நீட்டிக்கப்பட்டு 18ம் தேதி மாலை 5 மணிக்கு டெண்டர் திறக்கப்படும் என்று எல்காட் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இந்தத் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை மத்திய திட்டக் கமிஷன் நிராகரித்துவிட்டதும் நினைவுகூறத்தக்கது.
அடுத்த 5 ஆண்டுகளி்ல் 68 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க ரூ. 10,200 கோடியை வழங்குமாறு ஜெயலலிதா கோரியிருந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications