எனது மகன் தில்ஷனைக் கொன்ற அதிகாரியை கடுமையாக தண்டிக்க வேண்டும்- தாயார் ஆவேசம்

சென்னையை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்த சம்பவம் சென்னை சிறுவன் தில்ஷன், தீவுத் திடல் ராணுவக் குடியிருப்புக்குள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம். வாதாம் பழத்தைப் பறிப்பதற்காக போன குற்றத்திற்காக அந்த சிறுவனை சுட்டுக் கொன்றது மக்களை பதற வைத்து விட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியைக் கைது செய்வதில் சிபிசிஐடி போலீஸார் கடுமையாக திணறினர். காரணம், ராணுவத் தரப்பிலிருந்து சரிவர ஒத்துழைப்பு கிடைக்காததால்.
இந்த நிலையில், போலீஸாரிடன் கிடுக்கிப் பிடி விசாரணையில் குற்றவாளி சிக்கினார். அவரது பெயர் கந்தசாமி ராமராஜ் (எ) ராமராஜ் பாண்டியன். மதுரை மாவ்ட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த ஏப்ரல் மாதம் தான் அவர் லெப்டினென்னட் கர்னல் பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். இவர்தான் இந்த பாதகச் செயலைச் செய்தவர் என்று தெரிய வந்ததும் ஆதாரத்துடன் அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கைது நடவடிக்கை சிறுவன் தில்ஷன் வசித்து வரும் பகுதி மக்களிடையே ஓரளவுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் கைதுடன் நிற்காமல் கந்தசாமி ராமராஜ் (எ) ராமராஜ் பாண்டியனுக்கு கடும் தண்டனை வாங்கித் தர வேண்டும் என்று தில்ஷன் வசித்து வரும் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தில்ஷனின் தாயார் கலைவாணி கூறுகையில்,
கைதுடன் போலீஸார் நின்று விடாமல், சிறுவன் என்றும் பாராமல் எனது மகனைக் கொன்ற அந்த அதிகாரிக்கு போலீஸார் கடும் தண்டனை வாங்கித் தர வேண்டும் என்று ஆவேசத்துடன் கூறினார்.
சிறையில் அடைக்கப்பட்டார்
இதற்கிடையே கைது செய்யப்பட்ட கந்தசாமி ராமராஜ் (எ) ராமராஜ் பாண்டியன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் 22-ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
எப்படி சிக்கினார் கந்தசாமி ராமராஜ் (எ) ராமராஜ் பாண்டியன்?
இதற்கிடையே, அதிகாரி கந்தசாமி ராமராஜ் (எ) ராமராஜ் பாண்டியன் சிக்கியது எப்படி என்பது குறித்து சிபிசிஐடி கூடுதல் டிஜிபி சேகர் கூறுகையில்,
கடந்த 3ந் தேதி மதியம் 1 மணி அளவில் தீவுத்திடல் அருகே உள்ள கொடி மர சாலையில் அமைந்துள்ள ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் 13 வயது சிறுவன் தில்ஷன் துப்பாக்கியால் சுடப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற தமிழக முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 6 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவத்தை நேரில் பார்த்த சிறுவர்கள் மற்றும் சம்பவம் நடந்தபோது ராணுவ வளாகத்தில் இருந்த அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அங்கு கிடைத்த துப்பாக்கி குண்டு, சேகரிக்கப்பட்ட தடயங்கள் ஆகியவற்றை வைத்தும் விசாரித்தோம்.
ராணுவ குடியிருப்பில் பணிபுரியும் பாதுகாவலர்கள், அதிகாரிகள் வீட்டில் பணிபுரியும் வேலைக்காரர்களிடமும் விசாரித்தோம். மேலும் துப்பாக்கி சூடு நடைபெற்ற ராணுவ அதிகாரிகளின் வீடுகளில் கோர்ட்டு அனுமதி பெற்று சோதனைகளும் நடத்தப்பட்டன.
முதலில் சிறுவன் தில்ஷன் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி குண்டை தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி அது எந்த வகையிலான துப்பாக்கி என்பதை கண்டுபிடித்தோம். அதன் பிறகு தில்ஷனுடன் சென்ற சிறுவர்களிடம் விசாரித்தோம்.
முதலில் 3 பேர் மட்டுமே அங்கு சென்றதாக தகவல் கிடைத்தது. அதன் பிறகு போலீசாரின் தீவிர விசாரணையில் 4 வதாக ஒரு சிறுவனும் அங்கு இருந்ததை கண்டுபிடித்தோம். அவனை பிடித்து விசாரித்தபோது துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பின் வயதான ஒருவர் சம்பவ இடத்தில் துப்பாக்கி சூடு தடயங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதன் பிறகு அந்த சிறுவனை அழைத்துக் கொண்டு சந்தேகத்துக்கு இடமான அதிகாரிகளை அடையாளம் காட்ட அழைத்துச் சென்றோம். அவன் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கர்னல் கந்தசாமி ராமராஜ் (எ) ராமராஜ் பாண்டியனை அடையாளம் காட்டினான்.
இதையடுத்து அவருக்கு முறைப்படி சம்மன் அனுப்பி விசாரணையை தொடங்கினோம். ஆரம்பத்தில் சிறுவனை சுட்டுக் கொன்றதை மறுத்தார். என்னிடம் துப்பாக்கி எதுவும் இல்லை என்று கூறினார். ஆனால் அவரது வீட்டில் பறிமுதல் செய்த ஆவணங்களை வைத்து அவர் துப்பாக்கி லைசென்ஸ் புதுப்பிக்க புறநகர் போலீசில் மனு செய்து இருப்பதை கண்டு பிடித்தோம். இதனை காட்டி அவரிடம் விசாரித்தபோது உண்மையை ஒப்புக் கொண்டார்.
தில்ஷனை சுட்டுக்கொன்று விட்டு அந்த துப்பாக்கியையும், மீதம் இருந்த துப்பாக்கி குண்டுகளையும் நேப்பியர் பாலம் அருகே கூவத்தில் வீசி விட்டதாக கூறினார். அந்த இடத்தையும் அடையாளம் காட்டுவதாக உறுதியளித்தார்.
இதையடுத்து 09.07.2011 அன்று மாலை நேப்பியர் பாலம் அருகே கூவம் ஆற்றுப் பகுதியில் தீயணைப்பு படையினர் உதவியுடன் துப்பாக்கியையும், துப்பாக்கி குண்டுகள் வைக்கப்பட்டு இருந்த பாக்சையும் மீட்டோம். கூவத்தில் வீசிய தோட்டாக்களை கைப்பற்றினோம். துப்பாக்கியை மறைக்க அவர் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது என்றார்.
-
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications