தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்: மீன்கள் விலை உயரும் அபாயம்
தூத்துக்குடி: இரவில் கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி அளிக்கக் கோரி தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 260-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இவை அனைத்தும் அதிகாலை 5 மணிக்கு மீன்பிடிக்க சென்றால் இரவு 9 மணிக்குள் திரும்பி வந்து விட வேண்டும் என மீன்துறை உத்தரவிட்டுள்ளது. இரவு நேரத்தில் கடலில் தங்கி மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அண்டை மாவட்டங்களான ராமநாதபுரம், கன்னியாகுமரியில் மீனவர்கள் இரவு நேரத்தில் கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்ட மீனவர்கள் இரவு நேரங்களில் தூத்துக்குடி மாவட்ட கடல் எல்லைக்குள் வந்து மீன்களை பிடித்து சென்று விடுகின்றனர். இதனால் தூத்துக்குடி மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, குமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது தூத்துக்குடியிலும் விசைப்படகு தங்குகடல் மீன்பிடிக்கு அனுமதியளிக்க வேண்டும் என வலியுறுத்தி ஏற்கனவே கடந்த மாதம் இருநாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மீன்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில் நேற்று முதல் விசைப்படகு உரிமையாளர்கள், மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 260-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. வேலை நிறுத்தம் நீடித்தால் மீன்கள் வரத்து குறைந்து விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மீன்பிடி சார்பு தொழில்களும் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications