இலாகா ஒதுக்கீட்டில் அதிருப்தி-பதவியேற்பு விழாவுக்கு வராத குருதாஸ் காமத், ஸ்ரீகாந்த் ஜெனா
டெல்லி: தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்கள் குறித்து கடும் அதிருப்தி அடைந்ததால் இணை அமைச்சர்களான குருதாஸ் காமத்தும், ஸ்ரீகாந்த் ஜெனாவும் இன்றைய புதிய அமைச்சர்கள் பதவியேற்புக்கு வராமல் புறக்கணித்தனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் இன்று மாலை பதவியேற்றனர்.
புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பதவிப் பிரமானமும், ரகசிய காப்பு பிரமானமும் செய்து வைத்தார்.
தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன் சுற்றுச்சூழல் துறை இணையமைச்சராக பதவியேற்றார். இந்த விழாவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குருதாஸ் காமத் மற்றும் ஸ்ரீகாந்த் ஜெனா ஆகியோர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
குருதாஸ் காமத்திற்கு குடிதண்ணீர் மற்றும் சுகாதாரம், ஸ்ரீகாந்த் ஜெனாவுக்கு புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவி தரப்பட்டது. ஆனால் இருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்களை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்தே இருவரும் இன்றைய பதவியேற்பு விழாவுக்கு வரவில்லை.
அழகிரிக்கு 'கை' கொடுத்த ஜெனா
இவர்களில் ஸ்ரீகாந்த் ஜெனாவை யார் மறந்தாலும் தமிழக மக்களும், மு.க.அழகிரியும் மறக்க முடியாது. காரணம், மத்திய ரசாயணத்துறை கேபினட் அமைச்சராக இருப்பவர் அழகிரி. அவருக்குக் கீழ் இணை அமைச்சராக இருந்தவர் ஜெனா.
அழகிரி ஒரு நாள் கூட லோக்சபாவிலோ, ராஜ்யசபாவிலோ எம்.பிக்களின் எந்த ஒரு கேள்விக்கும் பதிலளித்தில்லை. அவருக்குப் பதில் ஜெனாதான் தொடர்ந்து பதிலளித்து வந்தார். கிட்டத்தட்ட அழகிரியின் பிரநிதியாக அவர் செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் தற்போது அழகிரியை விட்டு ஜெனாவைப் பிரித்து விட்டார் பிரதமர். அதேசமயம், தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பொறுப்பைக் கொடுத்ததன் மூலம் அழகிரிக்கும் கூட லேசான குட்டு வைத்துள்ளது காங்கிரஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications