வடகிழக்கு பாகிஸ்தானில் அல் ஜவாஹிரி: அமெரிக்கா
நியூயார்க்: அல் கொய்தா தீவிரவாத அமைப்பை அழிப்பதே தங்கள் லட்சியம் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேட்டா தெரிவித்துள்ளார்.
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் வைத்து தான் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து அமெரிக்கா தீவிரவாதிகளைப் பிடிக்க பாகி்ஸ்தான் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியது. பின்னர் பாகிஸ்தானுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி நிதியை அமெரிக்கா நிறுத்தியது.
இதையடுத்து அல் கொய்தா தலைவர் அல் ஜவாஹிரியை பிடிக்க அமெரிக்காவுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்கா தங்களுடன் உளவுத்துறை தகவல்களை பகிரந்து கொண்டால் தீவிரவாதிகளைப் பிடிக்க வசதியாக இருக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக பொறுப்பேற்றுள்ள லியோன் பனேட்டா கடந்த 9-ம் தேதி ஆப்கானிஸ்தான் சென்றார். அல் கொய்தாவின் தலைவர் அல் ஜவாஹிரி வடகிழக்கு பாகிஸ்தானில் உள்ள மலைப் பகுதியில் தான் பதுங்கியிருப்பதாக அவர் காபூலில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
பின் லேடன் கொல்லப்பட்ட பிறகு அல் கொய்தா தலைவர்களின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அல் கொய்தாவை அழிப்பதே எங்கள் லட்சியம் என்று மேலும் தெரிவித்தார்.
ஏற்கனவே பாகிஸ்தான் அல் கொய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்கள் நாட்டுக்கும், மக்களுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறியுள்ளது. தீவிரவாத அமைப்புகளின் தலைவர்கள் பலர் வேட்டையாடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications