7 அமைச்சர்களுக்கு கல்தா கொடுத்த பிரதமர்- 8 புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்தார்
டெல்லி: அமைச்சரவையிலிருந்து 7 பேரை அதிரடியாக தூக்கியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். அதேசமயம், 8 புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். இவர்களில் ஜிதேந்திரா சிங் மற்றும் மிலிந்த் தியோரா ஆகிய இருவரும் இளம் வயதினர்.
பிக் பிரதர்களான வெளியுறவு, நிதி, உள்துறை மற்றும் பாதுகாப்புத்துறையை மட்டும் விட்டு வைத்த பிரதமர் மன்மோகன் சிங், கிட்டத்தட்ட பல முக்கிய துறைகளை புதுப்பித்துள்ளார். தயாநிதி மாறன், முரளி தியோரா உள்பட 7 பேர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தயாநிதியும், முரளி தியோராவும் ஏற்கனவே ராஜினாமா கடிதங்கள் கொடுத்து விட்டனர். மற்றவர்களிடமும் ராஜினாமா கடிதகங்களை வாங்கி அத்தனையையும் குடியரசுத் தலைவருக்கு பிரதமர் அனுப்பி வைத்து விட்டார்.
அதேசமயம், கிஷோர் சந்திர தியோ உள்ளிட்ட 8 புதுமுகங்களுக்கு அமைச்சரவையில் இடம் அளித்துள்ளார். ஜெயந்தி நடராஜன் இதுவரை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டு வந்தார். தற்போது அவருக்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல பபன் சிங் கடோவார், சுதீப் பந்தோபாத்யாயா, ஜிதேந்திரா சிங், மிலிந்த் தியோரா, ராஜீவ் சுக்லா ஆகியோரும் முதல் முறையாக அமைச்சர்களாகியுள்ளனர்.
உருப்படியாக செயல்படாத காரணத்தால் எம்.எஸ்.கில், பி.கே.ஹண்டிக், காந்திலால் பூரியா ஆகியோர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்லனர்.
தயாநிதி மாறன் 2ஜி ஊழல் புகாரில் சிக்கி ராஜினாமா செய்தார். முரளி தியோரா தனது வயோதிகத்தைக் காரணம் காட்டி விலகி விட்டார். அவருக்குப் பதில் அவரது மகன் மிலிந்த் தியோராவுக்கு அமைச்சர் பொறுப்பு தரப்பட்டுள்ளது.
புதியவர்களையும் சேர்த்து தற்போது அமைச்சர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. முன்பு இது 67 ஆக இருந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications