ராசாவை எம்.பி. பதவியிலிருந்து நீக்கக் கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
அவிநாசி: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவை நீலகிரி தொகுதி எம்.பி. பதவியிலிருந்து நீக்கக் கோரி அவிநாசியில் இந்து முன்னணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவிநாசி ஒன்றிய, நகர இந்து முன்னணி சார்பில் ஆ. ராசாவை நீலகிரி தொகுதி எம்.பி. பதவியில் இருந்து நீக்கக் கோரி சேவூர் ரோடு பிரிவில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார். நகரத் தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநில பேச்சாளர் பிரபாகரன் கலந்து கொண்டு பேசியதாவது,
நீலகிரி தொகுதி எம்.பி. ஆ. ராசா 2ஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக திஹார் சிறையில் உள்ளார். இதனால் நீலகிரி தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடக்கவில்லை. மேலும், மருத்துவ உதவி தேவைப்படுவோர் உள்ளிட்ட பலர் எம்.பி.யிடம் கடிதம் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
உலக அரங்கில் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய ஆ. ராசாவை உடனே எம்.பி. பதவியில் இருந்து நீக்கிவிட்டு, இடைத்தேர்தல் நடத்த வேண்டும்.
2ஜி ஊழலில் யார், யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறதோ அவர்கள் அனைவரையும் சிபிஐ விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும்.
ஊழலுக்கு துணை போகும் காங்கிரஸ் கட்சியை மக்கள் அடுத்த தேர்தலில் தோற்கடிப்பார்கள். பாஜக ஆட்சி நடக்கும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வளர்ச்சிப் பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications