சரத் பொன்சேகா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: தேச துரோக வழக்கில் கைதாகி ராணுவ கோர்ட்டில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் இலங்கை முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேகாவின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் எக்ஸ்ரே எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் ராஜபக்சே போர்க்குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் நாள் நெருங்கிக் கொண்டிருப்பதாக தமிழ் சமூகம் நம்பிக்கொண்டிருக்கிறது. ராஜபக்சேயின் போர்க்குற்றங்களுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என பொன்சேகா கூறிக் கொண்டிருக்கிறார்.

எனவே இந்த நேரத்தில் எப்படியாவது மீண்டும் பொன்சேகாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள ராஜபக்சே அரசு, பொன்சேகா தொடர்பான விஷயங்களில் அதிக அக்கறை காட்டுவதாக இலங்கை அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+