நெல்லை மாவட்டத்தில் குவியும் நில மோசடி வழக்குகள்- ஒரே மாதத்தில் 55 வழக்குகள்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 55 நிலமோசடி புகார்கள் வந்துள்ளதாக எஸ்பி விஜேயந்திர பிதாரி கூறினார்.
தமிழகம் முழுவதும் நில மோசடி, நில அபகரிப்பு, நிலஆக்கிரமிப்பு விவகாரங்களில் காவல்துறையினரின் நடவடிக்கையை முதல்வர் ஜெயலலிதா முடுக்கி விட்டுள்ளார்.
இந்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக கடந்த திமுக ஆட்சிக்காலத்தின்போது பெருமளவில் நிலங்களை அபகரித்த திமுகவினர் சிக்கி வருகின்றனர்.
சாதாரண திமுக பிரமுகர் முதல் பெரிய பெரிய தலைவர்கள் வரை நில அபகரிப்பு வழக்குகளில் சிக்கி வருகின்றனர். இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் ஒரே மாதத்தில் 55 நில மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதுகுறித்து நெல்லை மாவட்ட எஸ்பி விஜேயந்திர பிதாரி கூறுகையில்,
நெல்லை மாவட்டத்தில் நிலமோசடிகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 55 புகார்கள் வந்துள்ளன. அதன்மீது விசாரணை நடந்து வருகிறது.
புகார்கள் உண்மையாக இருந்தால் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். இதற்காக ஏடிஎஸ்பி சொக்கலிங்கம், டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 8 போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கந்து வட்டி தொடர்பாக 48 பேர்கைது செய்யப்பட்டனர். சாட்சிகள் சரியாக இருந்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல்கூலிப்படையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மணல் கொள்ளையை தடுக்கவும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் 400 மணல் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாமிரபரணியில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருட்டு மணல் முற்றிலும் ஓழிக்கப்படும். பரப்பாடி கூட்டுறவு வங்கி கொள்ளை முயற்சியில் உள்ளூர்காரர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர் என்றார் அவர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications