இந்தியன் முஜாஹிதீன் தாக்குதல் குறித்து பிப்ரவரியிலேயே எச்சரித்திருந்த உளவுத்துறை!
ஆனால் எந்த இடத்தில், எந்த நேரத்தில், எந்த தேதியில் தாக்குதல்கள் நடக்கும் என்பது தெரியவில்லை என்று இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்துடன் தொடர்புடைய ஒருவர் தெரிவித்திருந்தார்.
இந்த தாக்குதல் குறித்து அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கப்பட்டன. ஏற்கனவே நடந்த தாக்குதல்களில் தொடர்பில்லாத 2 குழுக்களுக்கு பயிற்சி அளித்து தயார் நிலையில் வைத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த தாக்குதல்களுக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய யாரையும் பயன்படுத்த வேண்டாம் என்று இந்தியன் முஜாஹிதீன் அமைப்பாளர் ஒருவர் எச்சரித்திருந்தார்.
மஹாராஷ்டிரா போலீசின் பயங்கரவாத எதிர்ப்பு படையின்ர் நேற்று முன்தினம் தான் 2 இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளை கைது செய்தனர். மறுநாளே மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஜாவேரி பஜார், ஓபரா ஹவுஸ் மற்றும் கபூதர்கானா ஆகிய இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்துள்ளன.
கடந்த 2008-ம் ஆண்டு நடந்த அகமதாபாத் குண்டுவெடிப்புகளில் பயன்படுத்தப்பட்ட கார்களை கைதாகியுள்ள இந்த இருவரும் திருடியுள்ளதால், தற்போது நடந்துள்ள குண்டு வெடிப்புகளில் ஈடுபட்ட தீவிரவாதிகள் குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று நடந்துள்ள குண்டு வெடிப்புகளை இந்தியன் முஜாஹிதீன் மற்றும் லஷ்கர் இ தொய்பா தான் நடத்தியிருக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் சம்பவங்கள் நடந்த இடங்களில் அம்மோனியம் நைட்ரேட் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தான் இந்தியன் முஜாஹிதீன் மும்பை ரயில் தாக்குதல்கள், அகமதாபாத், ஜெய்பூர் மற்றும் டெல்லி குண்டுவெடிப்புகளில் பயன்படுத்தியுள்ளது.
இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை
இதற்கிடையே, மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பத்திற்கு எந்த தீவிரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications