மதுரை - சென்னை தூரந்தோ ரயில் பாதையை மாற்றியமைக்க கோரிக்கை!
மதுரை: மதுரையிலிருந்து சென்னை வரையிலான தூரந்தோ அதிவிரைவு வண்டி வழியின் பாதையை மாற்றியமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் தீபக்கிருஷ்ணனை ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர்கள் செய்யதுபாபு, விஜயராகவன் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அதில் அவர்கள் கூறியுள்ளதாவது,
மதுரையிலிருந்து சென்னை வரையிலான தூரந்தோ அதிவிரைவு வண்டி விரைவில் இயக்கப்படும் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இந்த வண்டி மதுரையிலிருந்து திருச்சி,கரூர், ஜோலார்பேட்டை வழியாக சென்னை செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பயண நேரமும், பயண தூரமும் அதிகமாகிறது. அதிக கட்டணமும் செலுத்த வேண்டியுள்ளது. இதை கருத்தில் கொண்டு மதுரையிலிருந்து நேர்வழியாக திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்மாவட்டங்களை சேர்ந்த ஏழை எளிய மக்கள் பலர் வட மாநிலங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நேராக வடமாநிலம் செல்ல வசதி ரயில் வசதி இல்லை. சென்னை சென்று அங்கு காத்து இருந்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மேலும், தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, மதுரை போன்ற நகரங்களில் இருந்து வடமாநிலங்களுக்கு நேரடியாக செல்லும் வகையில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும்.
ரயில் கால அட்டவணை புத்தகம் பொதுமக்களுக்கு கிடைப்பதில்லை. இந்த புத்தகம் அனைத்து ரயில் நிலையங்களிலும் கிடைக்க வழி வகை செய்யவேண்டும்.
மேலும் மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை விரைவு வண்டி, டெல்லி செல்லும் தமிழ்நாடு விரைவு ரயில்களில் தரமான உணவு கிடைக்க உறிய நவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மனுவைப் பெற்றுக் கொண்ட தென்னக ரயில்வே பொது மேலாளர் தீபக் கிருஷ்ணன் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications