வரி உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற சி.பி.எம். கோரிக்கை
மதுரை: ஏழை, எளிய மக்களை பாதிக்கும் தமிழக அரசின் வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு 3900 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் அரசுக்கு கிடைக்கும் வகையில் பல்வேறு பொருட்கள் மீதான விற்பனை வரியை திடீரென உயர்த்தியுள்ளது.
இந்த வரி உயர்வு ஜூலை 12 ம் தேதி முதலே அமலுக்கு வரும் என்றும் நிர்வாக ரீதியான உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் தவறான கொள்கையினால் அனைத்துப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து உள்ளது.
மேலும், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு மீதான சமீபத்திய விலை உயர்வு அனைத்துத்தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு விற்பனை வரிகளை உயர்த்தி இருப்பது தமிழக மக்களுக்கு கூடுதல் சுமைகளை ஏற்படுத்தும்.
உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றுக்கான 4 சதவிகித வாட் வரி ரத்து செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது எனினும், ஜவுளித்துணிகள், ஆயத்த ஆடைகள், சமையல் எண்ணெய் மற்றும் உணவுப்பொருட்கள் மீதான வரி உயர்வு ஏழை, நடுத்தர மக்களை பெருமளவு பாதிக்கும். எனவே இந்த வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
மேலும், தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆகஸ்ட் 4 முதல் நடைபெற உள்ளது. இந்த பேரவை கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படவுள்ள சூழலில், 3900 கோடி ரூபாய்க்கு வரிகளை உயர்த்தியிருப்பது சட்டப்பேரவையின் மரபுகளையும், ஜனநாயக நடைமுறையையும் பாதிக்கக்கூடிய செயலாகும்.
இவ்வாறு ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
முதலாளியாக சூப்பர் சான்ஸ்.. 1.50 கோடி வரை மானியம்! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு! எப்படி பெறுவது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications