தங்கம் விலை கடும் உயர்வு... இரண்டு நாட்களில் ரூ 424 அதிகரிப்பு!

கடந்த இரு தினங்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 422 உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.200 அதிகரித்து, ஒரு பவுன் தங்கம் ரூ.17368-க்கு விற்கப்பட்டது.
ரூ.17 ஆயிரத்தை கடந்தது
கடந்த மே மாதம் 28-ந்தேதி முதல்முறையாக தங்கத்தின் விலை ஒரு பவுன் 17 ரூபாயை கடந்து, 17 ஆயிரத்து 8 ரூபாய்க்கு விற்றது. அதன்பிறகு ஏறுவதும் இறங்குவதுமாக தங்கத்தின் விலை ஜுன் மாதம் 22-ந்தேதி இரண்டாவது முறையாக ஒரு பவுன் 17 ஆயிரம் ரூபாயைக் கடந்தது.
ஆனால் அதற்கு மறுநாளே விலை குறைந்து ஒரு பவுன் 16 ஆயிரத்து 992 ரூபாய்க்கு விற்பனையானது.
அதனைதொடர்ந்து ஸ்திரத்தன்மையை இழந்த தங்கத்தின் விலை மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.224 அதிகரித்து, 17 ஆயிரத்து 168 ரூபாய் என விற்கப்பட்டது.
வரலாறு காணாத விலை...
இந்த நிலையில், நேற்று மீண்டும் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து, ஒரு பவுன் 17 ஆயிரத்து 368 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஓரு கிராம் தங்கம் 2 ஆயிரத்து 171 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 அதிகரித்தது.
சர்வதேச மாற்றம் என்ற பெயரில் தங்கத்தின் விலையை வேண்டுமென்றே திட்டமிட்டு வியாபாரிகள் உயர்த்துவதாக பொதுமக்கள் சந்தேகம் தெரிவித்தனர். நேற்று முழுவதும் பெரும் அதிருப்தியுடன் கடைக்காரர்களிடம் தங்கள் வெறுப்பைக் காட்டினர் நகை வாங்க வந்த பலர்.
அரசு தங்கத்தின் விலையில் கட்டுப்பாட்டைக் கொண்டு வரவேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications