சோனியா காந்தி சோனியா ஆசியிருந்தா ஹீரோ, இல்லைனா ஜீரோ: நாராயணசாமி
புதுச்சேரி: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் ஆசி இருந்தால் தான் ஒருவர் ஹீரோவாக முடியும். இல்லையென்றால் வெறும் ஜீரோ தான் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுவையில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமையகத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதில் கலந்து கொண்டு மத்திய அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:
"காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடும். புதுவையில் மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டி வாக்களித்துள்ளதை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.
மும்பையில் வெடிகுண்டுகள் வெடித்தன. பிரதமரும், சோனியா காந்தியும் தான் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, அதில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சந்தி்த்து ஆறுதல் கூறினர். வேறு எந்த கட்சித் தலைவர்களும் செல்லவில்லை.
புதுவையில் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களின் நலனுக்காக பாடுபடுவோம்.
காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தியின் ஆசி இருந்தால் தான் ஒருவர் ஹீரோவாக முடியும். இல்லையென்றால் வெறும் ஜீரோ தான். புதுவையில் காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளது. நேற்று அடித்த காற்றில் மேலே செல்லலாம். ஆனால் அடுத்த காற்றில் கீழே வந்துவிடுவார்கள்.
தமிழகத்தி்ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி பல நலத்திட்டங்களை செயல்படுத்தினார். இருப்பினும் அவரால் மீண்டும் முதல்வராக முடியவில்லை. காங்கிரஸ்-திமுக கூட்டணி இன்னும் பலமாக தான் உள்ளது.
புதுவையில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. ஆனால் தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் 2 1/2 மாதங்களி்ல் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளனர். இவர்களை நம்பி வாக்களித்தவர்கள் எல்லாம் தற்போது கண்ணீர் வடிக்கின்றனர்.
புதுவை முதல்வர் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ. 50 ஆயிரம் கோடி தேவைப்படும். இருப்பினும் அவர் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்," என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications