2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு-ராசா, பெஹுரா, தோஷியிடம் நாளை மீண்டும் சிபிஐ விசாரணை

Subscribe to Oneindia Tamil

Raja
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராசாவிடம் மீண்டும் சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது. ராசா தவிர முன்னாள் தொலைத் தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த்த பெஹுரா, ரிலையன்ஸ் அடாக் குழும நிர்வாக இயக்குநர் கெளதம் தோஷி ஆகியோரிடமும் நாளை விசாரணை நடைபெறவுள்ளது.

இவர்களை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி சிபிஐ தரப்பில் சிறப்பு சிபிஐ நீதிபதி ஓ.பி.ஷைனியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதைப் பரிசீலித்த நீதிபதி, மூன்று பேரிடமும் விசாரணை நடத்த அனுமதி அளித்தார்.

அதேசமயம், தங்களை விசாரிக்க அனுமதிக்கக் கூடாது என்று கோரி மேற்கண்ட மூன்று பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை நீதிபதி நிராகரித்தார்.

முன்னதாக ராசா உள்ளிட்டோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனு மீது பேசிய அவர்களது வக்கீல்கள் வாதிடுகையில், குற்றம் சாட்டப்பட்டோர் கோரிய பல ஆவணங்களை இதுவரை சிபிஐ தரவில்லை. கிட்டத்தட்ட அவர்களை இருட்டில் வைத்துள்ளது சிபிஐ.

இந்த நிலையில் எந்த அடிப்படையில், எதற்காக மீண்டும் அவர்களை சிபிஐ விசாரிக்க விரும்புகிறது என்பதை விளக்க வேண்டும் என்று கோரினர்.

ஆனால் அவர்களது வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, சிபிஐயின் கோரிக்கை என்பது நீதிமன்றத்திற்கும், அரசுத் தரப்புக்கும் இடையிலான விவகாரமாகும். இதில் குற்றம் சாட்டப்பட்டோர் தலையிட உரிமை இல்லை. சிபிஐயின் கோரிக்கை ஏற்கப்படுகிறது என்று கூறி உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+