மும்பை தொடர் குண்டுவெடிப்பு-போலீஸ் விசாரணைக்குச் சென்றவர் மர்ம மரணம்

மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக பயஸ் உஸ்மானி என்பவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் நிஸார் தம்போலி கூறுகையில், பயஸ் உஸ்மானியை போலீஸார் விசாரணைக்காக அழைத்திருந்தனர். அப்போது அவர் தனக்கு உடல் நலம் சரியில்லை என்றார். இதையடுத்து போலீஸார் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரை போலீஸார் சித்திரவதை செய்யவில்லை. அடிக்கவும் இல்லை. ஒரு மணி நேரம் மட்டுமே அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
அவருக்கு நீண்ட காலமாக ரத்த அழுத்த பிரச்சினை இருந்து வருகிறது. மருந்துகளும் சாப்பிட்டு வருகிறார். கடந்த 3 நாட்களாக அவர் மருந்து உட்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதனால்தான் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
அகமதாபாத் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்சல் உஸ்மானி என்பவரின் சகோதரர்தான் இந்த பயஸ் உஸ்மானி.
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர் அப்சல் உஸ்மானி. 2008ம் ஆண்டு மும்பை குற்றப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். 2008ல் நடந்த குஜராத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு கார்கள் கொடுத்து உதவியதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications