சென்னை மாநகராட்சித் தேர்தலில் 75 வார்டுகளில் போட்டியிட பாமக முடிவு

சென்னையில் மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு அன்புமணி பேசுகையில்,
சட்டசபைத் தேர்தலில் பா.ம.க. வெற்றி பெற முடியாத கூட்டணியில் இருந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் பா.ம.க.வுக்கு எதிரான வாக்குகள் அல்ல. தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
நடுநிலையாளர்கள் புதிய வாக்காளர்கள், இளைஞர்கள் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக வாக்களித்தார்கள். தேர்தலுக்கு பிறகு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறோம்.
குறிப்பாக இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 27-ந்தேதி மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடக்கிறது. அந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதம் செய்ய இருக்கிறோம்.
இந்த தேர்தலில் 18 தொகுதிகளில் 70 ஆயிரத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று உள்ளோம். அப்படியிருந்தும் தோல்வி அடைந்தோம். 1991-ல் தி.மு.க. ஒரு இடத்தில்தான் வெற்றி பெற்றது. 96-ல் அ.தி.மு.க. 2 இடத்தில் வெற்றி பெற்றது. எனவே அரசியலில் வெற்றி தோல்வி சகஜம். வரும் காலத்தில் பா.ம.க.வின் பயணம் வேகமாக இருக்கும். இன்னும் வித்தியாசமான போக்கை காண்பீர்கள் என்றார்.
கூட்டத்தில்,
உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் குறைந்தது 75 வார்டுகளில் தேர்வு செய்து அதில் போட்டியிடுவது, அங்கு கட்சிப் பணிகளை வேகப்படுத்துவது.
பா.ம.க. இளைஞர் சங்கத்தை வலுப்படுத்த ஒவ்வொரு தொகுதியிலும் 25 வயதுக்குட்பட்ட 10-ம் வகுப்பு தேறிய 500 பேரை உறுப்பினராக சேர்ப்பது.
தேர்தலில் அரசியல் கட்சிகள் பணம் செலவழிப்பதை தடுக்க அரசியல் கட்சிகளும் தேர்தல் செலவுகளும் என்ற தலைப்பில் மாவட்டம் வாரியாக கருத்தரங்கம் நடத்துவது. முதல் கருத்தரங்கம் 24-ந் தேதி வேளச்சேரியில் நடக்கிறது. டாக்டர் ராமதாஸ் பேசுகிறார்.
வருகிற 25-ந் தேதி பசுமை தாயகம் சார்பில் விபத்து தடுப்பு பற்றிய விழிப்புணர்வு மனித சங்கிலியை மெரினா கடற்கரையில் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications