தில்ஷன் கொலையாளி மருத்துவமனையில் அனுமதி: ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிக்கை
சென்னை: சிறுவன் தில்ஷன் கொலைவழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கந்தசாமி ராமராஜ் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தீவுத்திடல் ராணுவக் குடியிருப்புக்குள் பாதாம் பழம் பறிக்கச் சென்ற 13 வயது சிறுவன் தில்ஷன் சுட்டுக்கொல்லப்பட்டான். கொலை நடந்த ஒரு வாரத்திற்குள் கொலையாளியான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கந்தசாமி ராமராஜை சிபி-சிஐடி போலீசார் கைது செய்தனர்.
சிறுவனைக் கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும், 8 தோட்டாக்களும் கூவத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் கைதான ராம்ராஜ் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பமே ஒரு ராணுவக் குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து அவரை குடும்பத்தார் யாரும் வந்து பார்க்கவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த அவருக்கு திடீர் என்று உல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிறையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
இதற்கிடையே கைப்பற்றப்பட்ட துப்பாக்கியும், தோட்டாக்களும் தடவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வந்தவுடன் வழக்கை நடத்த சிபி-சிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சிபி-சிஐடி போலீசார் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications