கருணாநிதி செய்த ஒரே அரும்பணி சமச்சீர் கல்வி தான்: நாஞ்சில் சம்பத்
சங்கரன்கோவில்: முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி தனது ஆட்சியில் செய்த ஒரே அரும்பணி சமச்சீர் கல்வி தான் என்று மதிமுக மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவில் நகர மதிமுக மாணவரணி சார்பில் கட்சியின் 18-ம் ஆண்டு தொடக்க விழா பொது கூட்டம் நேற்று நடந்தது. மாநில மாணவரணி செயலாளர் டாக்டர் சுப்பராஜ் தலைமை வகித்தார்.
இந்த விழாவில் கலந்து கொண்டு மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது,
ஜனநாயக நாட்டில் தேர்தலை சந்திக்காமல் புறக்கணித்து விட்டு இன்னும் நிலைத்து நிற்கும் கட்சி மதிமுக மட்டும் தான். 2016 சட்டசபை தேர்தல் தான் எங்களது இலக்கு. அப்போது பலர் கணக்கை முடிப்போம்.
தமிழகத்தின் எதிர்கட்சி தலைவராக வைகோ வந்து விடக்கூடாது என்பதற்காக எங்களை ஓரம் கட்டினார் ஜெயலலிதா. ஜனநாயக நாட்டில் எதிர்கட்சி தலைவருக்கு தான் மரியாதை.
சமச்சீர் கல்வி திட்ட செயல்பாட்டில் உள்ள குளறுபடியால் ஒன்றரை மாத காலமாக பள்ளியில் பாடம் படிக்க முடியாமல் மாணவ, மாணவிகள் தவித்து வருகின்றனர். உலக நாட்டில் இதுபோன்ற கொடுமை நடந்ததில்லை.
கருணாநிதி தனது ஆட்சியில் செய்த ஒரே அரும்பணி சமச்சீர் கல்வி தான். இதையே உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையே. சமச்சீர் கல்வியின் செயல்பாட்டில் ஜெயலலிதா செய்த தவறுக்கு அவர் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும். இது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தத் தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications