முர்டோச் பத்திரிக்கையின் போன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை வெளிப்படுத்திய ஷான் திடீர் மரணம்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்தின் மிகப் பிரபலமான ஆங்கில நாளிதழான த நியூஸ் ஆப் த வேர்ல்ட் பத்திரிக்கை போன் ஒட்டுக் கேட்டதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த ஷான் ஹோரே என்பவர் திடீர் என்று இறந்துள்ளார்.

இங்கிலாந்தின் மிகப் பிரபலமான ஆங்கில நாளிதழ் த நியூஸ் ஆப் த வேர்ல்ட். சமீபத்தில் இந்தப் பத்திரிக்கை தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிக்கியது. ஆப்கானிஸ்தானிலும் இராக்கிலும் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் வீரர்களின் குடும்பத்தினரின் தொலைபேசிகள், இ-மெயில்களை இந்த பத்திரிக்கையின் நிருபர்கள் 'ஹேக்' செய்து தகவல்களைப் பெற்று அவர்கள் குறித்து பரபரப்பான செய்திகளை வெளியிட்டனர். இதற்காக காவல் துறையினருக்கு லட்சக்கணக்கில் லஞ்சமும் கொடுத்தனர்.

இந்த விவகாரத்தை ஷான் ஹோரே என்பவர் தான் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். இதையடுத்து பெரும் பிரச்சனையில் சிக்கியது அந்த பத்திரிக்கை. பிரச்சனை பூதாகாரமாக வெடிக்கவே அந்தப் பத்திரிக்கையையே மூடுவதாக அதன் உரிமையாளரான ருப்பர்ட் முர்டாக் அறிவித்தார். நியூஸ் கார்பரேசன் என்ற குழுமத்தின் கீழ் பல்வேறு கண்டங்களில் நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், வார இதழ்களை நடத்தி வருபவர் முர்டாக்.

அறிவித்தவாறே அந்தப் பத்திரிக்கை மூடப்பட்டது. இந்நிலையில் முர்டாக் பத்திரிக்கையின் ரகசியங்களை வெளியிட்ட ஷான் இங்கிலாந்தில் உள்ள அவரது வீட்டில் திடீர் என்று இறந்து கிடந்துள்ளார். இந்த மரணத்தில் எந்தவித மர்மும் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஷான் திடீர் என்று இறந்துள்ளதையடுத்து இந்த வழக்கில் மேலும் பல பெரிய மனிதர்களின் பெயர் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+