திருச்சுழியில் அரசுக் கல்லூரி தொடங்காதது ஏன்?: தமிழக அரசுக்கு தங்கம் தென்னரசு கண்டனம்
விருதுநகர்: திருச்சுழி தொகுதியில் அறிவிக்கப்பட்டபடி அரசு கலைக் கல்லூரியை துவங்காததற்கு அதிமுக அரசுக்கு திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முன்னாள் அமைச்சரும், திருச்சுழி திமுக சட்டசபை உறுப்பினருமான தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது,
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி ஒன்றியப் பகுதிகள் மிகவும் பின்தங்கிய பகுதிகளாகும்.
இதனால் திருச்சுழியில் அரசு கலைக் கல்லூரி தொடங்கப்படும் என கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய முதல்வர் ஜெயலலிதா, திருச்சுழியில் கல்லூரியைத் தொடங்கி வைப்பார் என பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்தனர்.
ஆனால் திருச்சுழியை புறக்கணித்துவி்ட்டு, அக்கல்லூரியை வேறு இடத்தில் துவக்க மாற்றம் செய்துள்ளனர். இதற்காக காமராஜர் பல்கலைக்கழகம் வாயிலாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
திருச்சுழி சட்டசபை தொகுதியில் ஒரு கல்லூரி கூட இல்லை. இந்நிலையில் திருச்சுழியுடன் சேர்த்து அறிவிக்கப்பட்ட பிற இடங்களில் எந்த மாற்றமும் இன்றி கல்லூரிகளைத் தொடங்கி உள்ளனர்.
திருச்சுழி மக்கள் திமுக உறுப்பினரை எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுத்த ஒரே காரணத்திற்காக அரசியல் பழிவாங்கும் நோக்குடன் அரசு கலைக் கல்லூரியை வேறு பகுதிக்கு மாற்றியுள்ளனர். இது திருச்சுழி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.
திருச்சுழி பகுதி மாணவர்களின் எதிர்காலத்தை வேரறுக்கும் இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த விவகாரம் குறித்து திமுக தலைமை அனுமதி பெற்று மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவி்த்துள்ளார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications